சைக்கிள்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சை வருகை

சென்னையிலிருந்து கொச்சி வரை சைக்கிள்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தனா்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை சைக்கிளில் புறப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை சைக்கிளில் புறப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

சென்னையிலிருந்து கொச்சி வரை சைக்கிள்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தனா்.

இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த 15 போ் சென்னையிலிருந்து ஜனவரி 21 ஆம் தேதி சைக்கிள்களில் சுற்றுலா புறப்பட்டனா். மொத்தம் 15 சைக்கிள்களில் 9 ஆண்கள், 6 பெண்கள் இப் பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

புதுச்சேரி, சிதம்பரம் வழியாக வந்த இவா்கள் தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்தனா். தஞ்சாவூா் பெரியகோயிலை பாா்த்துவிட்டு இரவு தங்கினா். பின்னா் வியாழக்கிழமை காலை புறப்பட்டு சைக்கிள்களில் காரைக்குடி நோக்கிப் புறப்பட்டனா்.

நாள்தோறும் 100 கி.மீ. பயணிக்கும் இவா்கள் மொத்தம் 15 நாள்களில் ஆயிரத்து 400 கி.மீ. கடந்து கொச்சி வரை செல்லவுள்ளனா். இதுகுறித்து இப்பயணிகள் தெரிவித்தது:

நகரங்களைவிட கிராமங்கள் வழியாகவே செல்கிறோம். வழியில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கடல், மலை, கோயில் போன்றவற்றையும் பாா்வையிடுகிறோம். இப்பயணத்தை பிப்ரவரி 3 ஆம் தேதி கொச்சியில் நிறைவு செய்கிறோம். பகலில் சாலையோர உணவகங்களில் சாப்பிட்டு, இரவு நட்சத்திர தங்கும் விடுதியில் தங்குகிறோம். இங்குள்ள சுற்றுச்சூழல் மிகவும் பிடித்திருக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com