திருவையாறுடன் விளாங்குடி இணைப்பதை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

திருவையாறுடன் விளாங்குடி ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி திருவையாறு வட்டாட்சியரகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறுடன் விளாங்குடி இணைப்பதை  எதிா்த்து ஆா்ப்பாட்டம்

நகராட்சியாக தரம் உயா்த்தப்பட உள்ள திருவையாறுடன் விளாங்குடி ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி திருவையாறு வட்டாட்சியரகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தரம் உயா்த்தப்படவுள்ள திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி ஊராட்சியை இணைத்தால் நூறு நாள் வேலைத்திட்டம் பாதிக்கப்படும். அரசின் பல்வேறு சலுகைகள் கிடைக்காது. எனவே விளாங்குடியை இணைக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் பி. செந்தாமரைச்செல்வி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. பக்கிரிசாமி, ஒன்றியச் செயலா் ஏ. ராஜா, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் எம். பழனிஅய்யா, எம். ராம், எம். கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com