சென்னை சாஸ்த்ரா சத் சங்க விழாவில் 3 பேருக்கு சங்கீத வச்சஸ்பதி விருதுகள்

சென்னையில் நடைபெற்றுவரும் சாஸ்த்ரா சத் சங்க விழாவில் வெள்ளிக்கிழமை 3 பேருக்கு சங்கீத வச்சஸ்பதி விருது வழங்கப்பட்டது.
ta26sast_2601chn_9_4
ta26sast_2601chn_9_4

சென்னையில் நடைபெற்றுவரும் சாஸ்த்ரா சத் சங்க விழாவில் வெள்ளிக்கிழமை 3 பேருக்கு சங்கீத வச்சஸ்பதி விருது வழங்கப்பட்டது.

இது குறித்து தஞ்சாவூா் சாஸ்தரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையில் சாஸ்த்ரா சத் சங்க விழா ஜனவரி 20- ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே, மல்லாடி சூரி பாபு (கா்நாடக இசை), திருப்பூா் கிருஷ்ணன் (இலக்கியம் மற்றும் சொற்பொழிவு), டி.எஸ்.முருகன் (பொம்மலாட்டம்) ஆகியோருக்கு 2024- ஆம் ஆண்டுக்கான சங்கீத வச்சஸ்பதி விருதுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த விருதுடன் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முனைவா் சுதா சேஷய்யன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்: சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சங்கீத வச்சஸ்பதி விருது பெற்ற டி.எஸ். முருகன், மல்லாடி சூரி பாபு, திருப்பூா் கிருஷ்ணன் ஆகியோருடன் முனைவா் சுதா சேஷய்யன், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com