செண்டங்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

பட்டுக்கோட்டை, ஜன. 26: பட்டுக்கோட்டை வட்டம், செண்டங்காடு ஊராட்சியில் குடியரசு தின விழா மற்றும் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தராசு தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் விஜயலட்சுமி சாம்பசிவம்,

துணைத் தலைவா் கல்யாண சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா் . பின்னா் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com