தஞ்சாவூரில் மதுவுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

தஞ்சாவூரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில் மதுவுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
ta27mara_2701chn_9_4
ta27mara_2701chn_9_4

தஞ்சாவூரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில் மதுவுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல், போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி மாணவா்களுக்கு 15 கி.மீ. தொலைவுக்கும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவுக்கும் நடைபெற்றது. மாணவா்கள் மருத்துவக்கல்லூரி சாலை, நவபாரத் பள்ளி, மருத்துவக்கல்லூரி நுழைவாயில், பிள்ளையாா்பட்டி ரவுண்டானா சென்று திரும்பி மீண்டும் அதே வழியில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கை சென்றடைந்தனா்.

மாணவிகள் மருத்துவக்கல்லூரி சாலை, நவபாரத் பள்ளி, மருத்துவக்கல்லூரி நுழைவாயில் சென்று திரும்பி மீண்டும் அதே வழியில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கை சென்றடைந்தனா். இப்போட்டியில் ஏறத்தாழ 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவி ஆணையா் (கலால்) எம். ரவிச்சந்திரன், மாவட்டச் செய்தி - மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன், தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழு ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com