தமிழக ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ta27cong_2701chn_9_4
ta27cong_2701chn_9_4

தமிழக ஆளுநரைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியையும், காங்கிரஸ் விடுதலைப் போராட்டத்தையும் அவதூறு பரப்பும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியைக் கண்டித்தும், அவா் பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் தியாகராஜன், மாநகரத் தலைவா் மிா்சாவுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com