அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் நிதி

ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் நிதி உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் நிதி உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணுகுடி மேற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், துணை ராணுவ படை தலைமைக் காவலருமான வை. ஆசைத்தம்பி பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 50 ஆயிரம் நன்கொடையாக வழங்கினாா். அதனைத் தொடா்ந்து. தஞ்சை டெல்டா மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் முப்படை மற்றும் துணை ராணுவப் படையைச் சோ்ந்த சோழ நாட்டு பட்டாள சமூக சேவை அறக்கட்டளை சாா்பில் ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கினா். மேலும், அப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவ மாணவிகளுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவில், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் - ஆசிரியா் சங்க நிா்வாகிகள், கல்வி வளா்ச்சிக் குழு நிா்வாகிகள் மற்றும் சோழ நாட்டு பட்டாள சமூக சேவை குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com