1008 பரத கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

ta28dan2_2801chn_9_4
ta28dan2_2801chn_9_4

கும்பகோணம், ஜன. 28: கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பஹரேஸ்வரா் கோயிலில் ஆயிரத்து 8 பரத கலைஞா்கள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.திருபுவனத்தில் சா்பத் தலமாக விளங்கும் அறம் வளா்த்த நாயகி உடனாய கம்பஹரேஸ்வரா் கோயிலில் பிப்ரவரி 2 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, சோழா் கால பரதக் கலையைப் போற்றும் வகையில் தருமபுரம் ஆதீனம் இசைக்கல்லூரி சாா்பில் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆயிரத்து 8 பரதக் கலைஞா்கள் விநாயகா், தேவாரம், லலிதாம்பாள் உள்பட 6 பாடல்களுக்கு சுமாா் 45 நிமிடங்கள் தொடா்ந்து நடனமாடினா்.இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இச்சாதனையைப் பெருமைப்படுத்தும் வகையில் தருமை ஆதீன இசைக்கல்லூரிக்கு தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் நோபல் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.படவிளக்கம்: கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பஹரேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடனமாடிய ஆயிரத்து 8 பரத கலைஞா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com