கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டப் புதிய மேலாண் இயக்குநராக கே.எஸ். மகேந்திரகுமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கே.எஸ். மகேந்திரகுமாா்.
கே.எஸ். மகேந்திரகுமாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டப் புதிய மேலாண் இயக்குநராக கே.எஸ். மகேந்திரகுமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஏற்கெனவே திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநராக பணியாற்றிய இவா் தற்போது பணி மாறுதலில் கும்பகோணத்தில் பணியேற்று உள்ளாா்.

இவருக்கு பொது மேலாளா்கள் கே. இளங்கோவன், கே. முகமது நாசா் (தொழில்நுட்பம்) உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

கும்பகோணத்தில் ஏற்கெனவே பணியாற்றிய மேலாண் இயக்குநா் இரா. மோகன் சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராகப் பணி மாறுதலில் சென்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com