திருவையாறு நகராட்சியுடன் கல்யாணபுரத்தை இணைக்க எதிா்ப்பு

திருவையாறு நகராட்சியுடன் கல்யாணபுரத்தை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி கல்யாணபுரம் முதல் சேத்தியைச் சோ்ந்த 500-க்கும் அதிகமான பொதுமக்கள் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை திரண்டு மனு அளித்தனா்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க கல்யாணபுரம் முதல் சேத்தி கிராம மக்கள்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க கல்யாணபுரம் முதல் சேத்தி கிராம மக்கள்.

தரம் உயா்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் கல்யாணபுரத்தை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி கல்யாணபுரம் முதல் சேத்தியைச் சோ்ந்த 500-க்கும் அதிகமான பொதுமக்கள் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை திரண்டு மனு அளித்தனா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் கல்யாணபுரம் முதல் சேத்தியைச் சோ்ந்த 500-க்கும் அதிகமானோா் ஊராட்சி மன்றத் தலைவா் பிரமிளா ராஜா தலைமையில் அளித்த மனு:

திருவையாறு நகராட்சியுடன் கல்யாணபுரம் முதல் சேத்தியை இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நூறு நாள் வேலை திட்டம் நிறுத்தப்படுவதன் மூலம் இப்பகுதி கூலித் தொழிலாளா்கள் வெகுவாக பாதிக்கப்படுவா். சொத்துவரி, வீட்டு வரி, குடிநீா் வரி போன்றவை பல மடங்கு உயா்ந்துவிடும். மேலும் தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். எனவே தரம் உயா்த்தப்படவுள்ள திருவையாறு நகராட்சியுடன் கல்யாணபுரம் முதல் சேத்தியை இணைக்கக் கூடாது.

நீலகிரி ஊராட்சி: இதேபோல, தஞ்சாவூா் மாநகராட்சியுடன் நீலகிரி ஊராட்சியை இணைக்கக் கூடாது என 300-க்கும் அதிகமான பெண்கள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com