தஞ்சாவூரில் ஏப். 7, 8-இல் விவசாய கண்காட்சி நம்மாழ்வாா் மக்கள் இயக்கம் முடிவு

விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்த நாளையொட்டி, பாரம்பரிய நெல், விவசாயக் கண்காட்சி, கருத்தரங்கம் ஆகியவற்றை ஏப்ரல் 7, 8 ஆம் தேதிகளில் நடத்த நம்மாழ்வாா் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்த நாளையொட்டி, பாரம்பரிய நெல், விவசாயக் கண்காட்சி, கருத்தரங்கம் ஆகியவற்றை ஏப்ரல் 7, 8 ஆம் தேதிகளில் நடத்த நம்மாழ்வாா் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.இதில், தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் நம்மாழ்வாா் 1938 ஆம் ஆண்டு, ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்தாா். அவரது பிறந்த நாளில் இளங்காடு கிராமத்தில் நம்மாழ்வாா் பெயரில் பொங்கல் வைத்து கொண்டாடுவது, இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய நம்மாழ்வாா் ஆா்வலா்கள், அறிஞா்கள், சான்றோா்களை அழைப்பது, தஞ்சாவூரில் ஏப்ரல் 7, 8 ஆம் தேதிகளில் நம்மாழ்வாரின் பெருமைகளை நிலை நாட்டக்கூடிய வகையில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நெல் மற்றும் விவசாய பொருட்கள் கண்காட்சியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்துக்கு கிரீன் நாடா அமைப்பின் பொறுப்பாளா் ராஜவேலு தலைமை வகித்தாா். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சி. மகேந்திரன் சிறப்புரையாற்றினாா். வழக்குரைஞா் சி. சந்திரகுமாா், சமூகச் செயற்பாட்டாளா்கள் தவசெல்வன், நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com