தஞ்சாவூா் அருகே ஜல்லிக்கட்டில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பவுன்ராஜ்.
பவுன்ராஜ்.

 தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டியில் புனித அந்தோணியாா் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் காயமடைந்த 49 பேரில் 20 போ் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இவா்களில் காளையை விடுபவா்களுடன் புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டையைச் சோ்ந்த வி. பவுன்ராஜ் (49) சென்று கொண்டிருந்தாா். அப்போது, அருகே வந்த மற்றொரு காளை முட்டியதில் பலத்த காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com