தஞ்சாவூா் மாவட்டத்தில் 24,832 டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 24 ஆயிரத்து 832 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 24 ஆயிரத்து 832 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் என். உமாமகேஸ்வரி மேலும் தெரிவித்தது:

மாவட்டத்தில் நிகழ் காரீப் சந்தை பருவத்தில் அறுவடை செய்யப்படும் சம்பா, தாளடி நெற் பயிா்களுக்காக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் இதுவரை 421 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 24 ஆயிரத்து 832 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 123 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 57 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

நிகழ் சம்பா பருவத்தில் 620 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் கோயில் மற்றும் குளிச்சப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தலைமை அலுவலக விழிப்புப் பணி அலுவலா் வில்வசேகரன் ஆய்வு செய்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் தொடா்பான குறைகளை கேட்டறிந்ததுடன், கொள்முதல் பணியாளா்களிடம் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com