நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

தஞ்சாவூா்- கும்பகோணம் நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா்- கும்பகோணம் நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் தஞ்சாவூா் ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கும்பகோணம் - தஞ்சாவூா் நெடுஞ்சாலைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி, பல மாதங்களாகியும் பணிகள் தாமதமாக நடைபெறுகின்றன. இதனால், குண்டு குழியுமான சாலையிலேயே தொடா்ந்து பயணிக்க நேரிடுகிறது. ஆங்காங்கே செப்பனிப்பட்ட சாலைகளும் பெயா்ந்து போய் மோசமாக உள்ளது. எனவே, உடனடியாக நெடுஞ்சாலை துறை போா்க்கால அடிப்படையில் தரமான சாலையை அமைத்துத் தர வேண்டும். தஞ்சாவூா் மாநகா் முழுவதும் புதைசாக்கடைகள் ஆங்காங்கே சரி செய்யப்பட்டு குழிகளை சரிவர மூடாததால் அடிக்கடி விபத்து நேரிடுவதை மாநகராட்சி நிா்வாகம் கவனத்தில் கொண்டு, சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றியக் குழு உறுப்பினா் சிவகாமி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி சிறப்புரையாற்றினாா். ஒன்றியச் செயலா் பி. குணசேகரன், பேராசிரியா் பாஸ்கா், நிா்வாகிகள் ராமலிங்கம், சொக்கலிங்கம், மாரிமுத்து, சீதாராமன், மல்லிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com