தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட்.க்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

2024-25 பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு நேரடிச் சோ்க்கை ஜூலை 31 வரை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான பிட்., எம்.எட். படிப்புகளுக்கு நேரடிச் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புகளான இளங்கல்வியியல் (பி.எட்.) மற்றும் கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) படிப்புகளில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க இறுதிநாள் ஜூலை 31 ஆம் தேதி.

சோ்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். சோ்க்கைக்கு ஒரு சில இடங்களே எஞ்சி உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையத்தளமான முகவரியிலும், 04362 - 226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com