பயனாளி பங்களிப்பு செலுத்த இன்று வங்கிக் கடன் வழங்கல்

தஞ்சாவூா், ஜூலை 3: தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளுக்கு பங்களிப்பு செலுத்த இயலாதவா்களுக்காக வங்கிக் கடன் முகாம் வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திருச்சி கோட்டம் மூலம் தஞ்சாவூா் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அய்யனாா் கோயில் திட்டப்பகுதி, கூடநாணல் திட்டப்பகுதி, மகாராஜசமுத்திரம் திட்டப்பகுதி ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளில் பயனாளி பங்களிப்புத் தொகை செலுத்த இயலாதவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியரகத்தில் வங்கிக் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை (ஜூலை 4) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் கலந்து கொண்டு வங்கிக் கடன் பெற ஆதாா் அட்டை, பான் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் - 2, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com