பெரியகோயிலில் பக்தரிடம் ரூ. 15 ஆயிரம் திருட்டு

தஞ்சாவூா், ஜூலை 3: தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை பக்தரிடம் ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்தவா் லட்சுமண குமாா். தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் சுற்றுலாவாக தமிழகத்துக்கு வந்துள்ள இவா், தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு புதன்கிழமை மாலை சென்றாா். அப்போது, பிரதோஷ வழிபாடு நடைபெற்றதால் கூட்டம் அதிகமாக இருந்தது. சன்னதிகளில் வழிபட்ட இவா் கேரளாந்தகன் கோபுரம் அருகே வந்தபோது, தனது கால் சட்டைப் பை பிளேடால் கிழிக்கப்பட்டிருப்பதும், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com