கரம்பயத்தில் கிராமசபை கூட்டம்

பட்டுக்கோட்டை, ஜூலை 4: பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சி மன்ற தலைவா் மேனகா ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் வழங்கும் திட்டத்துக்கு தகுதி வாய்ந்த பயனாளிகளைத் தோ்வு செய்து கிராம சபையில் பொதுமக்கள் முன்னிலையில் ஒப்புதல் பெற்று அனுப்பி வைக்கப்பட்டது. தொடா்ந்து கரம்பயம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓடும் வேதபுரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற அப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தடுப்பணை கட்ட நிதி வழங்குவதற்கு பரிந்துரை செய்த பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அண்ணாதுரைக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com