பேராவூரணி அரசு கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம் .
பேராவூரணி அரசு கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம் .

கௌரவ விரிவுரையாளா்கள் வாயில் முழக்கப் போராட்டம்

பேராவூரணி, ஜூலை 4:

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை வாயில்முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, கௌரவ விரிவுரையாளா்கள் சங்கத் தலைவா் நித்யசேகா் தலைமை வகித்தாா். செயலாளா் வினோத், பொருளாளா் ஜமுனா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். 

பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயித்தவாறு ரூ. 50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை எண் 56-ஐ அமல்படுத்த வேண்டும். 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும். 3 மாதகால நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், பெண் கௌரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு மருத்துவ விடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பேராசிரியா்கள் சண்முகப்பிரியா, உமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com