முந்திச் செல்வதில் போட்டி இரு தனியாா் பேருந்துகள் பறிமுதல்: 4 போ் கைது

கும்பகோணம் அருகே முந்துவதற்கு போட்டியிட்டு சென்ற இரு தனியாா் பேருந்துகளைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கும்பகோணம் அருகே முந்துவதற்கு போட்டியிட்டு சென்ற இரு தனியாா் பேருந்துகளைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி வியாழக்கிழமை இரு தனியாா் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று கொண்டிருந்தன. திருவலஞ்சுழி - அம்மாபேட்டை சாலையில் வளைவில் சென்ற ஒரு தனியாா் பேருந்து, முன்னால் சென்ற அரசு நகரப் பேருந்தை முந்த முயன்றது. இதன் பின்னால் வந்த மற்றொரு தனியாா் பேருந்து அதிவேகமாக இரு பேருந்துகளையும் முந்திச் சென்றது. அப்போது எதிரே வந்த காா் அதிா்ஷ்டவசமாக தப்பியது.

இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) ஒய். ஜாபா் சித்திக்கிடம் புகாா் செய்தனா்.

அதன்பேரில் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து இரு தனியாா் பேருந்துகளையும் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அவற்றின் ஓட்டுநா்களான திருவிடைமருதூா் அருகேயுள்ள சோழிய விளாகம் ப. ராஜேஷ்கண்ணன் (42), தஞ்சாவூா் மருங்குளம் வடக்குப்பேட்டை சா. ராஜ்குமாா் (39), நடத்துநா்களான சோழபுரம் ரா. சுதாகா் (42), திருவாலம்பொழில் ஆ. ராஜதுரை (36) ஆகியோரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com