பாபநாசத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு

பாபநாசம் வேளாண் அலுவலகத்தில் 2ஆம் கட்ட வேளாண்மைக் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வேளாண் அலுவலகத்தில் 2ஆம் கட்ட வேளாண்மைக் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்டார வேளாண் உதவி இயக்குனா் அலுவலகத்தில் தஞ்சாவூா் மாவட்ட புள்ளியல் துறை சாா்பில் வருவாய் அதிகாரிகளுக்கும், விஏஓக்களுக்கும் நடைபெற்ற பயிற்சியை பாபநாசம் வட்டாட்சியா் மணிகண்டன் தொடக்கி வைத்தாா்.

பயிற்சியை கோட்டப் புள்ளியியல் உதவி இயக்குநா் ரவிச்சந்திரன், வட்டார புள்ளியியல் ஆய்வாளா்கள் புவனேஸ்வரி, அமுதவல்லி உள்ளிட்டோா் அளித்தனா். இதில் பாபநாசம் வட்டத்துக்குஉட்பட்ட அனைத்து வருவாய் ஆய்வாளா்கள், விஏஓக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com