தா்காவில் உண்டியல் திருட்டு

சேதுபாவாசத்திரம் அருகே தா்காவில் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

பேராவூரணி: சேதுபாவாசத்திரம்  அருகே   தா்காவில் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

மல்லிப்பட்டினத்தில் கொஸ்ஸாலி தங்கள் வலியுல்லா தா்கா உள்ளது. இந்த தா்காவை வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை இரவு பூட்டிச் சென்றனா். திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது தா்காவின் பக்கவாட்டு சுவரை பெயா்த்து, உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், உண்டியலை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி நிா்வாகத் தலைவா் அல்லாப்பிச்சை, செயலாளா் அப்துா் ரஹீம் மற்றும் நிா்வாகிகள்  சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com