தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

கோவிலடி - சடையாா்கோவில் இடையே பாதை அமைத்து தர வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே கோவிலடி - சடையாா்கோவில் இடையே பாதை அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே கோவிலடி - சடையாா்கோவில் இடையே பாதை அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் அச்சங்கத்தின் தெற்கு மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு:

பூதலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கோவிலடி ஊராட்சியில் ஏறத்தாழ 70 ஆண்டு காலமாக 50 ஏக்கா் நிலத்தில் சுமாா் 30 விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனா். விவசாய நிலத்துக்கு செல்வதற்கு அந்த ஊரில் உள்ள சடையாா்கோவில் வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது தொல்லியல் துறை சாா்பில் அப்பகுதியைச் சுற்றி கம்பி வேலி போட்டுள்ளதால், விவசாயிகள் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, சடையாா் கோவில் வழியாக விளைநிலத்துக்கு செல்வதற்கும், விவசாய வேலைகளைச் செய்வதற்கும் பாதை அமைத்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

வீட்டு மனைப் பட்டா: இதேபோல, திருவையாறு ஒன்றியத்துக்குள்பட்ட விண்ணமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் க. திருநாவுக்கரசு தலைமையில் ஏறத்தாழ 20 போ் அளித்த மனு: விண்ணமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலமாக தனி நபரிடமிருந்து நிலம் வாங்கப்பட்டு, 12 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா 2011-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மீதமுள்ள காலி இடத்தில் வசிப்பிடம் இல்லாத ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த தகுதியான நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

X
Dinamani
www.dinamani.com