தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூா் புத்தகத் திருவிழாவுக்கான விளம்பர பிரசுரத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூா் புத்தகத் திருவிழாவுக்கான விளம்பர பிரசுரத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப்.

தஞ்சாவூா் புத்தகத் திருவிழா விளம்பர பிரசுரம் வெளியீடு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூா் புத்தகத் திருவிழாவுக்கான விளம்பர பிரசுரம் வெளியிடப்பட்டது.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூா் புத்தகத் திருவிழாவுக்கான விளம்பர பிரசுரம் வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 548 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், தஞ்சாவூா் அரண்மனை மைதானத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஜூலை 19 -ஆம் தேதி முதல் 29- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தஞ்சாவூா் புத்தகத் திருவிழாவுக்கான இணையதளத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்து, விளம்பர பிரசுரத்தை வெளியிட்டாா்.

பான் செக்கா்ஸ் பப்ளிக் பள்ளி, மண் காப்போம் இயக்கம், தி ஸ்ட்ரெட்ச் மல்டி ஸ்போா்ட்ஸ் அரேனா ஆகியவை இணைந்து நடத்திய சிலம்பம், ஸ்கேட்டிங், பத்மாசன நிலையில் தண்ணீரில் மிதக்கும் போட்டி போன்ற உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டு உலக சாதனை செய்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆட்சியா் பாராட்டினாா்.

மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினா் 5 பேருக்கு தலா ரூ. 80 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்துக்கான காசோலையையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட கும்பகோணம் வட்டத்தைச் சாா்ந்த சிறுவனுக்கு சிறப்பு நாற்காலியையும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற் கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், உதவி ஆட்சியா் (பயிற்சி) உத்கா்ஷ் குமாா், தாட்கோ மாவட்ட மேலாளா் தா. ரெங்கராஜன், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) எஸ். சங்கா், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com