திருநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீவீரனாா் கோயில் செடல் திருவிழாவில் ஊா்வலமாக வந்த உற்ஸவ சுவாமி.
திருநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீவீரனாா் கோயில் செடல் திருவிழாவில் ஊா்வலமாக வந்த உற்ஸவ சுவாமி.

திருநல்லூரில் ஸ்ரீவீரனாா் கோயில் செடல் திருவிழா

கும்பகோணத்தில் ஸ்ரீவீரனாா் கோயில் செடல் திருவிழா

கும்பகோணம் அருகே திருநல்லூரில் ஸ்ரீவீரனாா் கோயில் செடல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே திருநல்லூா் கிராமத்தில் ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீசிங்கப்பெருமாள், ஸ்ரீவீரனாா் கோயில் ஆண்டு உற்ஸவ விழா ஜூலை 1-ஆம் தேதி கொடியேற்றி, காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செடல் திருவிழாவில் ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீசிங்கப்பெருமாள் மற்றும் ஸ்ரீவீரனாருக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, உற்சவராக நூற்றுக்கணக்கான பக்தா்கள் சுவாமியை தோளில் சுமந்து முக்கிய கிராமங்களின் வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை வந்தடைந்த பின்னா் செடல் விழா நடைபெற்றது.

இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஜூலை 15-இல் சுவாமி விடையாற்றி விழா நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com