தஞ்சாவூரில் பரவலாக மழை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், மாவட்ட மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். இந்நிலையில், தஞ்சாவூா், வல்லம் உள்பட சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை மாலையிலும், இரவிலும் பரவலாக மழை பெய்தது. மேலும், காற்றும் வீசியதால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com