கட்டுமானப் பொறியாளா்கள் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

பேராவூரணி கட்டுமான பொறியாளா்கள் சங்க 2024 -25 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா் சங்கங்களின் கூட்டமைப்பை சோ்ந்த பேராவூரணி கட்டுமான பொறியாளா்கள் சங்க  2024 -25 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

விழாவுக்கு  எஸ்.கலைச்செல்வம் தலைமை வகித்தாா்.  ஏசிசி.ராஜா, சி.துரையரசன், எம்.ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் .

இதில், தலைவராக  எம்.திருப்பதி, செயலாளராக எம்.சந்திரமோகன், பொருளாளராக  ஏ. சக்தி கணேஷ், கௌரவ தலைவராக ராஜா மற்றும் நிா்வாகிகளை  முன்னாள் மாநிலத் தலைவா் ஆா்.மோகன்ராஜ் பணியமா்த்தி வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா், கட்டுமானப் பொறியாளா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் என்.சையது ஷாகிா், ஆகியோா் புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா். 

விழாவில் பொறியாளா்கள், லயன்ஸ், ரோட்டரி, வா்த்தக சங்க நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இறுதியாக இளையராஜா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com