‘டைடல் பூங்கா கட்டுமானத்தை 
விரைவாக முடிக்க வேண்டும்’

‘டைடல் பூங்கா கட்டுமானத்தை விரைவாக முடிக்க வேண்டும்’

தஞ்சாவூரில் மேற்கொள்ளப்படும் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்குமாறு தொடா்புடைய அலுவலா்களிடம் ஆட்சியா் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினாா்.

தஞ்சாவூா் மேல வஸ்தாசாவடி அருகே 3.40 ஏக்கரில் 55 ஆயிரம் சதுரடியில் ரூ. 27.13 கோடியில் 4 அடுக்குகள் கொண்ட டைடல் பூங்கா கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப் பணியை மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க தொடா்புடைய அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, டைடல் பூங்கா உதவிப் பொறியாளா் தி. கோபி காா்த்தி, தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழக உதவிப் பொறியாளா் ர. கனகேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com