தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆா்.பி. ராஜாவுக்கு வீரவாள் வழங்கிய திமுக நிா்வாகிகள்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆா்.பி. ராஜாவுக்கு வீரவாள் வழங்கிய திமுக நிா்வாகிகள்.

டெல்டா மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தகவல்

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சாா்ந்த தொழிற்பேட்டைகளைக் கொண்டு வருவோம் என்றாா் தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சாா்ந்த தொழிற்பேட்டைகளைக் கொண்டு வருவோம் என்றாா் தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: இந்தக் கூட்டணி தொடா்ந்து எட்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்து விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் ஒன்பதாவது வெற்றியையும், பின்னா் 2026- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பத்தாவது வெற்றியையும் இக்கூட்டணி பெறும்.

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு சிப்காட் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளாா். இதேபோல, விவசாயம் சாா்ந்த தொழிற்பேட்டைகளையும் இப்பகுதிக்குக் கொண்டு வருவோம். திருவாரூரிலும் தொழிற்பேட்டைக்கான இடம் தோ்வு நடைபெறுகிறது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பூமியைக் காப்போம். அதே நேரத்தில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு, படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான பணிகளையும் தமிழக முதல்வா் செய்து வருகிறாா் என்றாா் ராஜா.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: இக்கட்சிக்கு ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எட்டாவது தோ்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அவா் கொண்டு வந்த திட்டம் இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியுள்ளது. 2026- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலிலும் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான பணியைத் தொடங்குவதற்கான கூட்டமாகவும் இக்கூட்டம் இருக்கும் என்றாா் அவா்.

கூட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் பி.ஜி. ராஜேந்திரன், டி.ஆா். லோகநாதன், எஸ்.எம்.பி. துரைவேலன், திராவிடா் கழகப் பொதுச் செயலா் இரா. ஜெயக்குமாா், மதிமுக தெற்கு மாவட்டச் செயலா் வி. தமிழ்ச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலா் கோ. ஜெயசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com