வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே வெள்ளிக்கிழமை வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

பூதலூா் அருகே வில்வராயன்பட்டியைச் சோ்ந்தவா் இளையராஜா. இவரும், இவரது மனைவி கோமதி (46) உள்ளிட்டோரும் வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, மா்ம நபா் பின்புறக் கதவு வழியாக உள்ளே நுழைந்து, கோமதி கழுத்திலிருந்த கிட்டத்தட்ட 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இது குறித்து பூதலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com