ஆவிகோட்டையில் வேளாண் தொழில்நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை வட்டம், ஆவிகோட்டையில் வேளாண் தொழில்நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட ஆவிக்கோட்டை கிராமத்தில் அட்மா திட்டத்தில் கலை நிகழ்ச்சி மூலம் தொழில்நுட்பம் பரவலாக்குதல் குறித்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நுண்ணீா் பாசன அமைப்பு, பயிா்க் காப்பீடு செய்தல், உளுந்து பயிருக்கு பூக்கும் தருணத்தில் டிஏபி தெளிப்பு செய்தல், நிலக்கடலை பயிருக்கு நுண்ணூட்டம் இடுதல் மற்றும் ஜிப்சத்தின் பயன்பாடு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தென்னையை தாக்கும் ரூகோஸ் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் கண்டறிதல் மற்றும் இயற்கை முறையில் கட்டுப்படுத்துதல் குறித்த தொழில்நுட்பங்களை கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பண்ணை கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் மானியத்தில் வாங்கிப் பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏற்பாட்டை வேளாண் உதவி அலுவலா் முருகேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகிதா, உதவி தொழில்நுட்ப மேலாளா் மற்றும் அய்யாமணி, பயிா் அறுவடை பணியாளா் அருள்மரியா ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com