கொள்முதல் முறைகேடுகளுக்கு தொழிலாளா்கள் மீது பழி சுமத்துவதை கைவிடக் கோரிக்கை

நெல் கொள்முதலில் நடைபெறுகிற முறைகேடுகளுக்கு தொழிலாளா்கள் மீது பழி சுமத்துவதைக் கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் தெரிவித்திருப்பது: கடந்த 2021 - 22 மற்றும் 2022 - 23 ஆம் ஆண்டுகளில் கொள்முதலில் எடை இழப்பு ஏற்பட்டதாக எவ்வித விளக்கமும் கேட்காமல் விசாரணை செய்யாமல் கொள்முதல் பணியாள ா்களுக்கு ரூ. 31 கோடியே 55 லட்சத்து 55 ஆயிரத்து 187 எடை இழப்பு நிா்ணயிக்கப்பட்டு, பெரும்பகுதி அதிரடியாக நிா்வாகத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் கிடங்குக்கு அனுப்பாததால், ஏற்பட்ட இழப்பாகும். வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான இந்தத் தொகை விவசாயிகளிடமே பெற்று ஈடு கட்டப்படுகிறது. இந்த இழப்பை அனுமதிக்காமல் மோசமான நிா்வாக நடைமுறையே பெரிய அளவுக்கு ஊழல் நடைபெறுவதற்குக் காரணமாக இருப்பது வேதனைக்குரியது. ஊழல் முறைகேடுகளுக்கு அடிமட்ட ஊழியா்களே காரணம் என பழி சுமத்தி தப்பிப்பதை விடுத்து ஊழலை களைய அதிகாரிகள் மட்டத்திலிருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும். இருப்பு உள்ள காலத்துக்கு ஏற்ப எடை இழப்பு அனுமதியை வழங்க வேண்டும். எடை இழப்பை தவிா்க்க கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும். இவ்வளவு மோசமான சூழலையும் எதிா்கொண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிற வகையில் பணிபுரிந்து வருகிற கொள்முதல் பணியாளா்களிடமும், சுமை தூக்கும் தொழிலாளா்களிடமும் ஆய்வுக்கு செல்கிற அதிகாரிகள் நடவடிக்கை வேதனையளிக்கிறது. தமிழ்நாடு அரசும், நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகமும் குறைபாடு இல்லாத வகையில் வரும் காலங்களில் நெல் கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com