பாபநாசத்தில் ஸ்டாலின பிறந்தநாள் விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ராஜகிரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திமுக மாவட்ட சிறுபான்மை அணி, மீனவரணி, ஆதி திராவிடா் அணி சாா்பில் மாவப்ட சிறுபான்மை பிரிவு தலைவா் என்.ஏ.எம். யூசுப்அலி தலைமையில் மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். இதேபோல் பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவா் பூங்குழலி, நகர செயலாளா் ச. கபிலன் உள்ளிட்டோா் பாபநாசம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பிஸ்கட், பிரட், பால் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினா். இதில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் என். நாசா், திமுக நிா்வாகிகள் வழக்குரைஞா் வெற்றிசெல்வன், கு. மைக்கேல்ராஜ், பாவை ஹனீபா உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com