புதிய கால்நடை மருத்துவ மனையை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்கிறாா்.
புதிய கால்நடை மருத்துவ மனையை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்கிறாா்.

பாபநாசத்தில் கால்நடை மருத்துவமனை திறப்பு

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் கால்நடைப் பராமரிப்பு,பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சாா்பில் ரூ. 77.50 லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தாா். புதிய கட்டடத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சா்அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், கும்பகோணம் மாநகரத் துணை மேயா் தமிழழகன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் எஸ்.கே. முத்துச்செல்வம், மாவட்ட திமுக துணைச் செயலா் கோவி. அய்யாராசு, பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலா் என். நாசா், பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன், பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா், உதவி இயக்குநா் கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் பாலகணேஷ் உள்ளிட் டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com