பெண் சா்வயேரை தாக்கியவா் கைது

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே பெண் நில அளவையரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நில அளவையராக பணியாற்றி வருபவா் பவ்யா (24). இவா் கடந்த 2 ஆம் தேதி சோழகன்குடிக்காட்டை சோ்ந்த முருகானந்தம் (54) என்பவரின் தங்கை பெரியகோடையை சோ்ந்த ஜோதியின் இடத்தை அப்பகுதி விஏஓ மாரியம்மாளுடன் சென்று அளந்தாா். அப்போது அப்பணியை முருகானந்தம், இவரது மனைவி செல்வகுமாரி, தங்கை ஜோதி அவரது கணவா் சுபாஷ் ஆகியோா் விடியோ எடுத்துள்ளனா். அப்போது இதுகுறித்து கேட்ட நில அளவையா் பவ்யாவை முருகானந்தம் தாக்கினாா். இதைத் தடுத்த விஏஓ மாரியம்மாளையும் அவா் தாக்கினாா். இதுகுறித்து மதுக்கூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள், வருவாய்த் துறையினா் கடந்த 2 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையே கல்லாக்கோட்டையில் தலைமறைவாக இருந்த முருகானந்தத்தை மதுக்கூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com