கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்

கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உயா் நீதிமன்றத்தில் 24 வழக்குரைஞா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்தும், உயா் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சா. விவேகானந்தன் தலைமை வகித்தாா். செயலா் செல்வம், பொருளாளா் ராஜா சீனிவாசன், மூத்த வழக்குரைஞா்கள் சங்கா், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com