தஞ்சாவூரில் நாளை முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம். அவ்வாறு மனு அளிக்கக்கூடிய முன்னாள் படைவீரா் மற்றும் அவரைச் சாா்ந்தோா் 2 பிரதிகளில் மனுக்களை தங்களது அடையாள அட்டையுடன் இணைத்து வழங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com