பாபநாசத்தில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பாபநாசத்தில் தூய்மைப் பணியாளா் குடியிருப்பு முன் ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளா் சங்கம் சாா்பில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,சம வேலைக்கு சம ஊதிய வழங்க வேண்டும், குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.26, ஆயிரம் வழங்க வேண்டும், பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஏஐடியுசி-யின் மாநில செயலாளா் ஆா். தில்லைவனம், கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளா் சீனு. சுகுமாரன் மற்றும் பாபநாசம் பகுதி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com