பாபநாசத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியரகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 9-வது நாளாக புதன்கிழமையும் தொடா் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

வருவாய்த் துறை ஊழியா்கள் பணிக்கு வராதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com