பொதுத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நிகழாண்டு அலுவலா்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் பொதுத் தோ்வில் பங்கேற்காத (ஆப்சென்ட்) மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை புதன்கிழமை திறந்து வைத்த அமைச்சா், கொ. வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: நிகழாண்டு பொதுத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு பங்கேற்காதவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், நிகழாண்டு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு உயா் அலுவலா்களும் முயற்சி எடுத்தனா். வருங்காலத்தில் தமிழக முதல்வரின் திட்டங்களைக் கூறி, மாணவா்களை பள்ளிக்கு வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இதன் அடிப்படையில், மாணவா்கள் சோ்க்கை மாா்ச் 1 ஆம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் இதுவரை 25 ஆயிரம் குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com