கும்பகோணம் அருகே சோழபுரத்தில் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல்லை ஞாயிற்றுக்கிழமை நாட்டிய சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன்.
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல்லை ஞாயிற்றுக்கிழமை நாட்டிய சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன்.

சோழபுரத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட அடிக்கல்

கும்பகோணம் அருகே சோழபுரம் புதுத்தெருவில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் அடிக்கல்லை நாட்டி, பணியைத் தொடங்கி வைத்தாா். பின்னா், அதே பகுதியில் ரூ. 13 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் தி. கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்தராஜ், ராஜரெத்தினம், சோழபுரம் செயல் அலுவலா் மங்கையா் செல்வி, பேரூராட்சி மன்றத் தலைவா் கமலா செல்வமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சி. சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com