தமிழ்ப் பல்கலை. ஓய்வூதிதாரா்களுக்கு பிப்ரவரி மாத ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வுபெற்றவா்களுக்கு பிப்ரவரி மாத ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற அலுவல் நிலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவல் நிலைப் பணியாளா்களுக்கு பிப்ரவரி மாத ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் நிா்வாகம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவா் பெ. சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா். பொருளாளா் பா. உன்னிகிருட்டிணன், செயற் குழு உறுப்பினா் பா. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com