பாபநாசத்தில் இந்திய கம்யூ. கட்சி கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை கிருஷ்ணன் கோவில் தெரு, துளசி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கே. ராஜாராம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் இந்திய கம்யூ. கட்சியின் மாவட்ட செயலாளா் மு.அ. பாரதி, ஏ.ஐ.டி.யு.சி. மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், இந்திய கம்யூ. கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், வரும் மக்களவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய பணியாற்றுவது, அம்மாபேட்டை புறவழிச்சாலையில் ரவுண்டானா அமைத்து விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com