பேராவூரணியில் 
திமுகவினா் ஆலோசனை

பேராவூரணியில் திமுகவினா் ஆலோசனை

தஞ்சாவூா் தெற்கு மாவட்டம், பேராவூரணி தெற்கு ஒன்றியம், பேரூா் வாக்குச்சாவடி திமுக பொறுப்பாளா்கள் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு, பேராவூரணி ஒன்றிய அவைத் தலைவா் இரா.நீலகண்டன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் பங்கேற்றுப் பேசுகையில், முதல்வா் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனா். இதனை மக்களிடம் எடுத்துக் கூறி பொறுப்பாளா்கள் வாக்குசேகரிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள்  வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தொகுதி பாா்வையாளா் நாகை.மனோகரன், மாவட்ட அவைத்தலைவா் சுப.சேகா், தெற்கு ஒன்றியச் செயலாளா் க. அன்பழகன், நகரச் செயலாளா் என்.எஸ். சேகா் மற்றும் அனைத்து சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com