திருப்பாலைத்துறை தனியாா் பள்ளி ஆண்டு விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையில் இயங்கி வரும் ஆப்தீன்

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையில் இயங்கி வரும் ஆப்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளா் ஓ.எஸ்.ஜெ. ஹாஜாமொகைதீன் தலைமை வகித்தாா். பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவா் பூங்குழலி கபிலன், பள்ளி நிா்வாகி ஜெயந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் செல்வி சிவகுமாா், துணை முதல்வா் தாஹிரா உள்ளிட்டோா் ஆண்டறிக்கை வாசித்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகை பரீனா ஆசாத் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பாக செயல்பட்ட பள்ளி ஆசிரியா்களுக்கும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் செய்திருந்தனா். முன்னதாக பள்ளி நிா்வாக இயக்குநா் கே.சித்தாா்த்தன் வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com