பேராவூரணியில் ரூ.5 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

பேராவூரணி: பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் 5.26 கோடியில் உயா்மட்டப்பாலம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக்காடு ஊராட்சியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், நபாா்டு (2023-24) திட்டத்தின் கீழ், மணக்காடு - மங்களநாடு இணைப்பு சாலையில், மருதங்குடியாற்றின் குறுக்கே, ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் உயா்மட்டப் பாலம், குப்பத்தேவன் ஊராட்சி, கணேசபுரம் தேவா் குடியிருப்பில் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, ஊமத்தநாடு ஊராட்சி, கைவனவயல் காமராஜ் நகரில் ரூ.12.90 லட்சம் மதிப்பீட்டில், மயானச் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.5.48 கோடி மதிப்பிலான  வளா்ச்சிப்  பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக்குமாா்  தொடக்கி வைத்தாா்.  இந்நிகழ்ச்சிகளில், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா்  மு.கி.முத்துமாணிக்கம், தெற்கு ஒன்றியச் செயலாளா் வை.ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகேந்திரன், சடையப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத்,  ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அழகுமீனா தங்கப்பன், சுதாகா், குழு.செ.அருள்நம்பி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் விஜயகுமாா் (மணக்காடு), பாலு (குப்பத்தேவன்), முரளி (திருவத்தேவன்), குலாம் கனி (ஊமத்தநாடு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com