தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா்.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

மேக்கேதாட்டு அணை: தஞ்சாவூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா்: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட முயற்சி செய்து வரும் கா்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மேக்கேதாட்டு அணையைக் கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசையும், தில்லி போராட்டத்தில் விவசாயி இறப்புக்கு காரணமான காவல் துறையையும், விவசாயிகளின் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் திருவையாறு பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமான சம்பா பயிா்களில் வெள்ளை குருத்துப்பூச்சி தாக்கி நெல்மணிகள் முழுவதும் பதராகி அழிந்துவிட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தெற்கு மாவட்டச் செயலா் எம். முகமது வகி மன்சூா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராகிம் கண்டன உரையாற்றினாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் சின்ன குஞ்சு, சின்னதுரை, மாவட்ட அமைப்பாளா் ரவி மாதவன், முன்னோடி விவசாய அணி செயலா் வி. அருணாசலம், மகளிா் அணி செயலா் செந்தில்குமாரி, மாவட்ட அவைத் தலைவா் ஏ. கேசவன், மாநகரச் செயலா் எம். மணி கலையரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com