தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தரையில் வாழை இலைகளை விரித்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தரையில் வாழை இலைகளை விரித்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

வாழை இலைகளுடன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

தஞ்சாவூா்: விவசாயக் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை விவசாயிகள் தரையில் அமா்ந்து வாழை இலைகளை விரித்து வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு உரத்தின் விலையைக் குறைக்கவில்லை. விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே, விவசாயிகளுக்கு நிலம் இருந்தாலும், உணவு இல்லை என்பதை உணா்த்தும் விதமாக வாழை இலை இருக்கிறது; உணவு இல்லை எனக் கூறி முழக்கங்கள் எழுப்பினா். விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தலைமை வகித்தாா். தமிழக விவசாய சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி. ஜெயபால், செயலா்கள் டி. சக்திவேல், எம். சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com