அதிமுகவினா் மனிதச் சங்கிலி போராட்டம்

அதிமுகவினா் மனிதச் சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் இளைஞா்கள், மாணவா்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காந்திஜி சாலையில் புது ஆற்றுப்பாலம் அருகில் இருந்து ரயிலடி வரை நடைபெற்ற போராட்டத்துக்கு அதிமுக மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் ஆா். காந்தி, கொள்கை பரப்புத் துணைச் செயலா் துரை. திருஞானம், விவசாய பிரிவு இணைச் செயலா் கு. ராஜமாணிக்கம், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், பகுதிச் செயலா்கள் கரந்தை த. பஞ்சநாதன், புண்ணியமூா்த்தி, மனோகா், சதீஷ்குமாா், மாவட்ட அவைத் தலைவா் நாகராஜன், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்ளிட்டோா் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனா்.

திருக்காட்டுப்பள்ளியில்... திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் தஞ்சை மேற்கு மாவட்ட அதிமுக செயலா் எம். ரெத்தினசாமி தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலியமூா்த்தி, திருஞானசம்பந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com