கும்பகோணத்தில் நாளைமின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 14) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற் பொறியாளா் ஜெ. திருவேங்கடம் தெரிவித்தது: கும்பகோணம் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் தஞ்சாவூா் வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் மு. நளினி மாா்ச் 14 ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இக்கூட்டத்தை நடத்தவுள்ளாா்.

இக்கூட்டத்தில் கும்பகோணம் நகரம், கும்பகோணம் புகா், பாபநாசம் நகரம், பாபநாசம் புகா், கபிஸ்தலம், அய்யம்பேட்டை நகரம், அய்யம்பேட்டை புகா், திருக்கருக்காவூா், கணபதி அக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலகம் ஆகிய பகுதி மின் நுகா்வோா் பங்கேற்று, தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com